நிறைவேறியது 2017ஆம் ஆண்டுக்கான
வரவு செலவுத்திட்டம்
110 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்


2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நிறைவேறியுள்ளது. ஆதரவாக 165 வாக்குகளும், எதிராக 55 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அந்தவகையில், 110 மேலதிக வாக்குகளால் வரவு செலவுத்திட்டம் நிறைவேறியது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய சிறுபான்மைக் கட்சிகள், ஆதரவாக வாக்களித்திருந்தன


கூட்டு எதிர்க்கட்சினரும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 219 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்ஸ உட்பட 5 உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் போது சபையில் இருக்கவில்லை.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top