சென்னையில் பரபரப்பான சூழ்நிலை
பொலிஸ் கமிஷனர் சரமாரி பொலிஸாருக்கு உத்தரவு
‛முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது' என, அப்பல்லோ மருத்துவமனை அறிவித்த பிறகு, சென்னையில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இதை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்து சென்னை கமிஷனர் ஜார்ஜ் சரமாரி சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
.அவரது உத்தரவு வருமாறு:
*காவல் நிலையங்களில் குறைந்த எண்ணிக்கையில் பொலிஸார் இருந்தால் போதும், தேவையின்றி பொலிஸார் யாரும் காவல் நிலையத்தில் அமர கூடாது.
* மக்கள் பார்வையில் இருக்கும்படி பொலிஸார் நடமாட்டம் இருக்க வேண்டும்.
*பொலிஸாருக்கு விடுமுறை என்ற பேச்சுக்கே இடமில்லை.
*ஐ.எஸ்., எனப்படும் நுண்ணறிவு பிரிவு பொலிஸாரும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
*பிரச்னைக்குரிய இடங்கள் என ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட பகுதிகளில், நிரந்தர எண்ணிக்கையில் பொலிஸார் இருக்க வேண்டும்.
*சிக்னல் தோறும் பொலிஸ் பாதுகாப்பு இருக்க வேண்டும்.
*ரோந்து பணியில் தொய்வு இருக்க கூடாது. 24 மணி நேரமும் பொலிஸார் ரோந்து பணியில் இருக்க வேண்டும்.
*உயர் பொலிஸ் அதிகாரி தலைமையில் ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பொலிஸார் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
0 comments:
Post a Comment