நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் எடுத்த அதிர்ச்சி முடிவு



அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதை எதிர்க்கும் வகையில் நோபல் பரிசு பெற்ற பிரபல எழுத்தாளர் ஒருவர் அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியா நாட்டை சேர்ந்த Wole Soyinka(82) என்ற எழுத்தாளர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் குடியேறி வசித்து வந்துள்ளார்.

பிரபல எழுத்தாளரான இவர் கடந்த 1986 ஆண்டு நோபல் பரிசை பெற்றுள்ளார். ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒருவர் நோபர் பரிசு பெறுவது இதுவே முதல் முறையாகும்.

அமெரிக்காவில் குடியேறிகிரீன் கார்ட்எனப்படும் நிரந்தர குடியிருப்பு உரிமை பெற்று வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க தேர்தலில் டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டபோது, ‘டிரம்ப் வெற்றி பெற்றால் நான் நிச்சயமாக அமெரிக்காவில் இருக்க மாட்டேன்எனக் கூறியுள்ளார்.

எனினும், நடந்து முடிந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று தற்போது ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.

டிரம்ப் வெற்றி பெற்று விட்டார் என்ற செய்தி ஊடகங்களில் வெளியான அடுத்த நாள் எழுத்தாளர் தனது கிரீன் கார்டை தூக்கி வீசிவிட்டு அமெரிக்காவை விட்டு வெளியேறி தற்போது தென் ஆப்பிரிக்காவில் வசித்து வருகிறார்.

நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த எழுத்தாளர், ‘டிரம்ப் தலைமையில் ஆட்சி நடப்பதை நான் ஏற்கவில்லை. இதனால் என்னுடைய கிரீன் கார்டை தூக்கி வீசிவிட்டு அமெரிக்காவை விட்டு வெளியேறிவிட்டேன்.


இது என்னுடைய தனிப்பட்ட முடிவு. என்னுடைய ஆதரவாளர்களையும் இதுபோன்ற செயலில் ஈடுப்பட நான் தூண்டவில்லைஎனவும் எழுத்தாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top