டான் பிரியசாத் இரண்டு லட்சம் ரூபா
சரீரப் பிணையில் விடுதலை



முஸ்லிம்களுக்கு எதிராக கடும் தொனியில் இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த டான் பிரியசாத் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பொதுபல சேனாவின் முக்கியஸ்தர்களில் ஒருவரான சுரேஷ் பிரியசாத் எனப்படும் டான் பிரியசாத் முஸ்லிம்களுக்கு எதிரான கடும் இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு வந்திருந்ததுடன், தேவைப்பட்டால் குண்டுவீசி முஸ்லிம்களை அரை மணிநேரத்தில் அழிப்பேன் என்றும் சூளுரைத்திருந்தார்.

அவருக்கு எதிராக தௌஹீத் ஜமாஅத் மேற்கொண்ட முறைப்பாடு மற்றும் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் ஆகியோரின் முயற்சி காரணமாக கடந்த 15ம் திகதி டான் பிரியசாத் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருந்தார்.

இதனையடுத்து பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் கடும் ஆத்திரம் கொண்டிருந்தார்.

அவரது ஆத்திரத்தைத் தணித்து சமாதானப்படுத்தும் வகையில் அசாத் சாலி மற்றும் அமைச்சர் ரிசாத் கட்சி முக்கியஸ்தர்கள் இணைந்து முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டு தௌஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் அப்துல் ராசிக்கையும் கைது செய்ய வைத்திருந்தனர்.

இன்று வரை அவருக்கு பிணை வழங்கப்படவில்லைஇந்நிலையில் டான் பிரியசாத் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு லட்சம் ரூபா சரீரப் பிணையில் அவரை விடுதலை செய்யுமாறு கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அத்துடன் அவருக்கு எதிரான வாதங்களை முன்வைக்க கொழும்பு குற்றத்தடுப்பு மற்றும் கோட்டை பொலிசார் தரப்பில் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top