அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப்
அதிகாரப்பூர்வமாக தெரிவு
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப், தேர்தல் சபை ஓட்டெடுப்பிலும் வெற்றி பெற்று அமெரிக்க ஜனாதிபதியாக அதிகாரப்பூர்வமாக தெரிவு செய்யப்பட்டார்.
அமெரிக்காவில், சமீபத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட, டொனால்டு டிரம்ப், 70, வெற்றி பெற்றார்; ஜனவரியில், அவர் பதவி ஏற்க உள்ளார். ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்கெடுப்பில் வெற்றி பெறுபவர், மாநிலங்களில் உள்ள தேர்தல் சபை வாக்கெடுப்பிலும் வெற்றி பெற வேண்டும்.
:இந்நிலையில் தேர்தல் சபை உறுப்பினர்களின் கூட்டம் நேற்று (டிச.,19) நடத்த முடிவு செய்யப்பட்டது.
538 பிரதிநிதிகளை கொண்ட இக்கூட்டத்தில் 270 பேரின் வாக்குகளை டிரம்ப் பெற வேண்டும். இக்கூட்டத்தில் 304 எலக்ட்ரோல் வாக்குகளை பெற்று டிரம்ப், அமெரிக்க ஜனாதிபதியாக அதிகாரப்பூர்வமாக தெரிவு செய்யப்பட்டார். ஹிலாரிக்கு 227 எலக்ட்ரோல் வாக்குகள் கிடைத்தன.
0 comments:
Post a Comment