உலகின் முதல் அதிசய தாயார்!
உலகிலேயே முதன் முதலாக கருப்பப்பை திசுக்கள் நீக்கிய பிறகும் இளம்பெண் ஒருவர் ஆரோக்கியமாக குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் மருத்துவ உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய தலைநகரான லண்டனில் Moaza Al Matrooshi என்ற 24 வயதான பெண் தனது கணவருடன் வசித்து வருகிறார்.
இப்பெண் பிறந்த நாள் முதல் பிறப்புறுப்பு வழியாக அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்படும் நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.
பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்ட பிறகு அவர் பருவமடைவதற்கு முன்னதாக 9 வயதாக இருந்தபோது அவரது கருப்பையில் உள்ள சில திசுக்கள் நீக்கப்பட்டது.
பின்னர், இந்த திசுக்களை நைட்ரஜன் திரவத்தில் பனித்துகள்கள் போல் பதப்படுத்தி பாதுகாப்பாக வைக்கப்பட்டது. பல்வேறு கட்டங்களாக நிகழ்ந்த சிகிச்சைகளால் அப்பெண் பெரும் சிரமத்திற்கு உள்ளானர்.
இந்நிலையில், கடந்தாண்டு பதப்படுத்தப்பட்ட திசுக்களை மீண்டும் உயிர்ப்பித்து இளம்பெண்ணின் கருப்பையுடன் இணைத்து சிகிச்சை செய்யப்பட்டது.
இச்சிகிச்சையை தொடர்ந்து அவரது கருப்பையில் கருமுட்டைகள் வளர தொடங்கின. குழந்த பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் கணவன், மனைவி காத்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கருப்பையில் முட்டைகள் ஆரோக்கியமாக வளர்ச்சி அடைந்ததை தொடர்ந்து நேற்று போர்ட்லாண்ட் மருத்துவமனையில் IVR மூலம் அப்பெண் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
மருத்துவ உலகில் முதல் முறையாக கருப்பை திசுக்கள் நீக்கப்பட்டு, பின்னர் அதன் மூலம் ஆரோக்கியமாக குழந்த பெற்றெடுத்து முதல் தாயார் என்ற பெயரை Moaza Al Matrooshi பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Moaza Al Matrooshi, 24, pictured, from London, gave birth to her son yesterday following successful IVF treatment |
She originally had her ovary removed and frozen before puberty to protect her from the damaging effects of chemotherapy, which she was undergoing to battle a blood disorder |
0 comments:
Post a Comment