அலெப்போ நகரில் இருந்து வெளியேற
பல்லாயிரக்கணக்கான மக்கள் காத்திருப்பு
சிரியாவில் தற்காலிக போர் நிறுத்தத்தை இருதரப்பினரும் திடீரென்று
ரத்து செய்ததால் அலெப்போ நகரை விட்டு வெளியேற முடியாமல் பல்லாயிரக்கணக்கான மக்கள் தவிப்புடன்
காத்திருக்கின்றனர்.
சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தை பதவியில் இருந்து நீக்குவதற்காக கடந்த ஆறாண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்குள்ள கிழக்கு அலெப்போ நகரை கிளர்ச்சியாளர்களிடம் இருந்து மீட்பதற்காக கடுமையான சண்டை நடந்து வந்தது. நகரின் பெரும்பான்மையான பகுதிகளை ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்தின் படைகள் மீட்டு விட்டன.
இதற்கிடையே அலெப்போவில் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ஜனாதிபதி ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நிறுத்தம் செய்வதற்காக துருக்கியும், ரஷியாவும் முயற்சி மேற்கொண்டன.
அதில் ஜனாதிபதி ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது.
இந்த உடன்பாட்டின்படி கிழக்கு அலெப்போ நகரில் இருந்து கிளர்ச்சியாளர்களும், பொதுமக்களும் வெளியேறி, வடக்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள பகுதிக்கு சென்று விட வேண்டும்.
போரினால் காயம் அடைந்த மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உடனடியாக வெளியேற முன்னுரிமை அளிக்கப்பட்டது. அவர்கள் வெளியேறுவதற்காக 20 பஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
0 comments:
Post a Comment