இந்த கேள்விகளுக்கு என்ன பதில்!

அம்மா இறந்தது இரவு 11:30 மணிக்கு என்றால்!
எப்படி இந்திய பிரதமர் மோடி இரவு 11:09 மணிக்கு இரங்கல் வெளியிட்டார்???
காலம் கடந்தாலும் ஒருநாள் உண்மை வெளிச்சத்திற்கு வரும்..
ஜெயலலிதாவின் நல்லடக்கம் முடிவுற்றதை தொடர்ந்து பல்வேறு மர்மங்களுக்கு விடை தேட தமிழக மக்கள் ஆரம்பித்து இருப்பதாக சில இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதுடன் மர்மங்களை வினாவாக பட்டியல் இட்டுள்ளது
01- மிக நன்றாக இருந்தவர் 2 மாதங்களுக்கு முன்பு திடீரென இரவோடு இரவாக மருத்துவமனையில் மர்மமாக அனுமதி.
02- சாதாரண காய்ச்சல் தான் 2 நாட்களில் வீடு திரும்புவார் என தகவல்.
03- தினம், தினம், ஒவ்வொரு நோய்க்கு சிகிச்சை அளிப்பதாக மாறி, மாறி அறிவிப்பு.
04- 3 மாதம் ஆனபோதும் கூட எவரையும் பார்க்க கடைசி வரை அனுமதிக்கவில்லை.
இது யாருடைய உத்தரவு?
05- 3 மாதம், கட்சி , மற்றும் அரசு யாருடைய கட்டுப்பாட்டில் இயங்கியது?
06- அனைத்து ம் சரியாகிவிட்டது சராசரி உணவை சாப்பிட தொடங்கி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு விட்டார் 2 நாளில் நலமுடன் வீடு திரும்பவுள்ளார் என்று சொன்னீர்களே…?
07- கடைசி வரை சிகிச்சை எடுக்கும் ஒரு புகைப்படம் கூட வெளியிடவில்லையே ஏன்?
08- இறப்பதற்கு முன்பே தமிழகம் முழுவதும் உள்ள எல்லா அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் எவ்வாறு உடனடியாக ஒன்று கூடி புதிய முதல்வரை தேர்வு செய்தனர்.
09-அமைச்சர்களும் எந்த குழப்பமின்றி இலாகா நியமிக்கப்பட்டு உடனடியாக எப்படி பதவியேற்க முடிந்தது?
10- ரத்த உறவான அவரது அண்ணன் மகளை கூட மருத்துவமனைக்குள் அனுமதிக்காமல் மிரட்டி வீட்டுக்கு செல்ல சொன்ன காரணம் என்ன?
11)தந்தி டிவி மரணத்தை முன் கூட்டியே அறிவித்ததும், அதை உடனே திரும்பபெற்றதும் யாரால்? ஏன்?
12)இறந்து அரை மணி நேரம் கூட ஆகாத இந்த துக்கத்திலும் இவ்வளவு தெளிவாக ஆளுநரை சந்தித்து முதல்வராக பதவியேற்பு நிகழ்சி நடத்தியது எப்படி ?
13)கைது நேரத்தில் பேச முடியாமல் குழுங்கி குழுங்கி அழுது கொண்டே உறுதிமொழியை பாதியிலேயே நிறுத்திவிட்டு பதவியேற்ற நீங்கள் தற்போது சிறப்பாக அழுகையின்றி உறுதி மொழி எடுக்க எவ்வாறு முடிந்தது??
14) காலையில் இருந்து இரவு் வரையும் மருத்துவமனை முன்பாக பட்டினியாக அழுது உருண்டு கிடப்பதில் பாமர மக்களை தவிர ஒரு பண முதலை கூட தென்படவில்லையே எப்படி?
இந்த கேள்விகளுக்கு என்ன பதில்!

எந்த மதம் எந்த மொழியாக இருந்தாலும் உயிரானது விலைமதிக்க முடியாதது.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top