வாடகை கார்களில் பெண்கள்  டிரைவர்களாக நியமனம்

பாகிஸ்தானில் வாடகை கார்களில் பெண் டிரைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வர்த்தக நகரமான கரீமில் பெண்கள் டிரைவர்களாகி உள்ளனர்.
பாகிஸ்தானில் வாடகை கார்களில் பெண்கள் டிரைவர்களாக பணிபுரிவதில்லை. அதற்கு பழமைவாதிகளின் எதிர்ப்பு காரணமாக இருந்தது.
இந்த நிலையில் தற்போது வாடகை கார்களில் பெண்கள் டிரைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர், பாகிஸ்தானின் வர்த்தக நகரமான கரீமில் பெண்கள் டிரைவர்களாகி உள்ளனர்.
இவர்கள் பாகுபாடு இன்றி ஆண் மற்றும் பெண் பயணிகளை ஏற்றிச் செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கணவனை இழந்த பெண்கள், வறுமையில் வாடும் பெண்கள் உள்ளிட்டோர் டிரைவர்களாக தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

இவர்கள் டிரைவர் பணி செய்வதன் மூலம் குடும்பம் மற்றும் குழந்தைகளின் செலவுக்கு பயன்படும் என பெண்கள் தெரிவித்துள்ளனர். தற்போது கரீம் நகரில் தொடங்கப்பட்டுள்ள இச்சேவை லாகூர், இஸ்லாமாபாத் மற்றும் கராச்சியிலும் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top