அலெப்போவில் போர் முடிந்தது

கிளர்ச்சியாளர்களும், பொதுமக்களும் ஒரே நேரத்தில்
அங்கிருந்து வெளியேறி விட வேண்டும்
சிரியா அரசு அறிவிப்பு

கிளர்ச்சியாளர்கள் வெளியேறுவதில் தாமதம்

சிரியா நாட்டில் அலெப்போ நகரில் நடந்து வந்த போர் முடிந்தது. அங்கிருந்து கிளர்ச்சியாளர்கள் வெளியேறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சிரியாவில் 6-வது ஆண்டாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்குள்ள கிழக்கு அலெப்போ நகரை கிளர்ச்சியாளர்களிடம் இருந்து மீட்பதற்காக கடுமையான சண்டை நடந்து வந்தது. நகரின் பெரும்பான்மையான பகுதிகளை அதிபர் பஷார் அல் ஆசாத்தின் படைகள் மீட்டு விட்டன.

இதற்கிடையே அலெப்போவில் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அதிபர் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நிறுத்தம் செய்வதற்காக துருக்கியும், ரஷியாவும் முயற்சி மேற்கொண்டன.

அதில் அதிபர் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நேற்று முன்தினம் சண்டை நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது.

இதன்படி கிழக்கு அலெப்போ நகரில் இருந்து கிளர்ச்சியாளர்களும், பொதுமக்களும் வெளியேறி, வடக்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள பகுதிக்கு சென்று விட வேண்டும்.

இந்த உடன்பாட்டை தொடர்ந்து அங்கு நேற்று காலை வரை கிளர்ச்சியாளர்களுக்கும், அதிபர் படைகளுக்கும் இடையே மோதல் இல்லை. ஆனால், பின்னர் அங்கு குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாகவும், அது எங்கிருந்து வந்தது என தெரியவில்லை எனவும் சிரியாவில் உள்ள மனித உரிமை கண்காணிப்பகம் கூறியுள்ளது.

ஆனால் போர் ஓய்ந்து விட்டதாக .நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் .நா.வுக்கான ரஷிய தூதர் சுர்கின் தெரிவித்தார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “எங்களுக்கு கிடைத்துள்ள கடைசி நேர தகவல்படி, கிழக்கு அலெப்போவில் ராணுவ நடவடிக்கைகள் முடிவுக்கு வந்து விட்டனஎன்று கூறியுள்ளானார்.

அலெப்போ நகரம் மீண்டும் அதிபர் படைகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பது, அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. அத்துடன் சிரியாவுக்கு உதவியுள்ள ரஷியா மற்றும் ஈரானுக்கு கிடைத்துள்ள வெற்றியாகவும் கருதப்படுகிறது.

கிழக்கு அலெப்போ நகரில் இருந்து முதலில் போரினால் காயம் அடைந்த மக்கள் 70 பேர், அவர்களது குடும்பத்தினர் என மொத்தம் 150 பேர் மற்றும் கிளர்ச்சியாளர்களில் ஒரு பிரிவினர் வெளியேறுவார்கள் என தகவல்கள் வெளியாகின. அவர்கள் வெளியேறுவதற்காக அங்கு 20 பஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் நேற்று காலையில் அவர்கள் வெளியேறிவிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. அனேகமாக அவர்கள் இன்று (வியாழக்கிழமை) வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதற்கிடையே காயம் அடைந்த கிளர்ச்சியாளர்களும், பொதுமக்களும் ஒரே நேரத்தில் அங்கிருந்து வெளியேறி விட வேண்டும் என்று சிரியா அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top