மன்சூர் ஏ காதரே அதிகாரபூர்வமாக கட்சியின் ஆவணங்களில் கையெழுத்திடும் தகுதியைக் கொண்டவர்
இது விடயத்தில் எந்த விட்டுக் கொடுப்பும் இல்லை
ஹஸன் அலியுடன் பேசி பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் விருப்பம்
கண்டி பேராளர் மகாநட்டில் செயலாளராக தெரிவு செய்யப்பட்ட மன்சூர் ஏ காதர் தொடர்பான விடயத்தில் எந்த விட்டுக் கொடுப்பும் இல்லை என்றும் அவரே அதிகாரபூர்வமாக ஆவணங்களில் கையெழுத்திடும் தகுதியைக் கொண்டவர் என்ற விடயமும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீடக் கூட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கட்சியின் அரசியல் பீட உறுப்பினரான சிலர் ஹஸன்
அலியுடன் பேசி இந்த விடயத்துக்கு தீர்வு காண வேண்டுமென தங்களது கருத்தை வலியுறுத்தியபோது
கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள், கட்சியின் செயலாளரான ஹஸன் அலியுடன்
பேசி பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண தானும் விரும்புவதாகத் தெரிவித்தார். ஹஸன் அலியை
தான் சந்தித்து தனக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்கள் தொடர்பில் அவருடன் கலந்துரையாட விரும்புவதாகவும்
அங்கு கூறினார்
ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸின்
அரசியல் உயர்பீடக்
கூட்டம் நேற்று இரவு 14 ஆம் திகதி கொழும்பிலுள்ள தாருஸ்ஸலாமில் நடைபெற்ற
நிலையில் அனைவராலும்
எதிர்பார்க்கப்பட்ட கட்சியின் செயலாளர்
நாயகம் எம்.ரீ. ஹஸன்
அலி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இதன் காரணமாக
ஹஸன் அலியுடன்
கலந்துரையாடலை மேற்கொள்ள முடியாத நிலைமை அங்கு
ஏற்பட்டது.
இதேவேளை,
கண்டி பேராளர்
மகாநட்டில் செயலாளராக தெரிவு செய்யப்பட்ட மன்சூர்
ஏ காதர்
தொடர்பான விடயத்தில்
எந்த விட்டுக்
கொடுப்பும் இல்லை என்றும் அவரே அதிகாரபூர்வமாக
ஆவணங்களில் கையெழுத்திடும் தகுதியைக் கொண்டவர் என்ற
விடயமும் அங்கு
மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment