சசிகலா என்ன தமிழகத்தின் முதல்வரா...?
இல்லை இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சரா...
அக்கறையாக பதில்
சொல்லியிருக்கிறார்
எமது இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்!
கச்சத்தீவில் புதுப்பிக்கப்பட்ட புனித அந்தோணியார் தேவாலயத்தின்
தொடக்க விழாவில் தமிழக மீனவர்கள் 100 பேர் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று சசிகலா
விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன
ஏற்றுக் கொண்டிருப்பது, சசிகலா இப்போதே தமிழக முதல்வர் ஆகி விட்டாரா? என்ற சந்தேகத்தை
ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இருந்து 100 மீனவர்கள், கச்சத்தீவு தேவாலய விழாவில் கலந்துகொள்ள அனுமதி அளித்திருப்பதாக ஆறுமுகம் தொண்டைமானுக்கு ஜனாதிபதி கடிதம் எழுதியுள்ளார்.
ஆறுமுகம் தொண்டைமானுக்கு ஜனாதிபதி எழுதிய கடிதத்தில், "இந்திய அமைச்சர் திரு.பொன். ராதா கிருஷ்ணன் மற்றும் திருமதி.சசிகலா ஆகியோர் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் அதிக மீனவர்கள் பங்குகொள்ள அனுமதி அளிக்குமாறு கோரியிருந்தனர். இதுதொடர்பாக இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முடிவின்படி, ஏற்கெனவே 20 தமிழக மீனவர்களை அனுமதிக்க முடிவெடுத்திருந்த நிலையில், இப்போது 100 தமிழக மீனவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்" என கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டைமான் திருமதி.சசிகலா மற்றும் மத்திய அமைச்சர் திரு. பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு தனித்தனியாக எழுதியுள்ள கடிதங்களில் ஜனாதிபதியின் ஒப்புதலை உறுதி செய்துள்ளார்.
சசிகலா என்ன தமிழகத்தின் முதல்வரா...? இல்லை இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சரா... செயலாளரா...? எந்தவொரு அரசாங்க பொறுப்பிலும் இல்லாத சசிகலா கடிதம் எழுதுகிறார்... அதற்கு மிக அக்கறையாக பதில் சொல்லியிருக்கிறார் எமது இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்!
0 comments:
Post a Comment