பாகிஸ்தான் புதிய பிரதமராக சாகித் அப்பாஸி தெரிவு

பாராளுமன்ற வாக்கெடுப்பில் 221 உறுப்பினர்கள் ஆதரவு

பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின் சாகித் ககான் அப்பாஸி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வெளிநாடுகளில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் சொத்துகளை குவித்து வைத்துள்ளதாக பனாமா பேப்பர்ஸ் மூலம் அம்பலமானது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட், பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு நவாஸ் ஷெரிப்க்கு உத்தரவிட்டது. இதனையடுத்து, தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, புதிய பிரதமராக நவாஸின் இளைய சகோதரர், ஷபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே, பிரதமராக பதவியேற்க முடியும் என்பதால், அதுவரை இடைக்காலப் பிரதமராக அமைச்சர் ஷாகித் ககான் அப்பாசி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அப்பாசி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இதேபோல், இம்ரான் கான் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சர்தாரி கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட எதிர்கட்சிகள் சார்பில் 5 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர்.
 இதையடுத்து, பிரதமரை தெரிவு செய்வதற்காக நேற்று பாராளுமன்றம் கூடியது. அப்போது, பிரதமர் பதவிக்கான வேட்பாளர் தெரிவு குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 342 உறுப்பினர்கள் கொண்ட அவையில், மெஜாரிட்டி பெறுவதற்கு 172 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. வாக்கெடுப்பில், ஆளுங்கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்ட அப்பாஸி 221 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் நாட்டின் 18-வது பிரதமராக பதவியேற்க உள்ளார்.


ஷபாஸ் ஷெரீப் எம்.பி.யாக தெரிவு செய்யப்படும் வரை, இடைக்கால பிரதமராக அப்பாஸி செயல்படுவார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top