பொலன்னறுவை றோயல் ஆரம்பக்கல்லூரி புதிய கட்டடம் திறப்பு

ஜனாதிபதியினால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

பொலன்னறுவை றோயல் ஆரம்பக் கல்லூரியின் புதிய மூன்று மாடிக் கட்டிடம் மற்றும் நடன மண்டபம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
ரஜரட்ட நவோதயஎழுச்சிபெறும் பொலன்னறுவை மாவட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பாடசாலை அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்து வசதிகளுடனும் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மண்டபம் நேற்று பிற்பகல் திறந்துவைக்கப்பட்டது. இந்த கட்டட நிர்மாணத்திற்கு 50 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
கல்லூரிக்கு சென்ற ஜனாதிபதியை மாணவர்கள் பெருமகிழ்ச்சியுடன் வரவேற்றனர். கல்லூரியில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.
கல்லூரியின் புதிய கணினி பிரிவு மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையம் என்பனவும் ஜனாதிபதியினால் மாணவர்களிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரத்ன, மாகாண அமைச்சர் சம்பத் ஸ்ரீநிலந்த, கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கலந்துகொண்டனர்.









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top