உயர்தர பரீட்சை வினாத்தாள் திருத்த பணிகளுக்கு
27 பாடசாலைகள் தெரிவு
இம்முறை க.பொ.த. உயர்தர பரீட்சை வினாத்தாள் திருத்தும் முதலாவது கட்டப் பணிக்கு 27 பாடசாலைகள் தெரிவு செய்யப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயர்தர பரீட்சையின் முதலாவது கட்ட வினாத்தாள் திருத்தும் பணி செப்டெம்பர் மாதம் 7ம் திகதி முதல் 20ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
கொழும்பு றோயல் கல்லூரி, கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி, கண்டி விகாரமாதேவி மகளிர் கல்லூரி, கண்டி சுவர்ணமாலி மகளிர் கல்லூரி, கண்டி சீதாதேவி மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகள் வினாத்தாள் திருத்த பணிகளுக்காக மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் திருத்தும் பணிகளுக்கு 5 பாடசாலைகள் முழுமையாக தெரிவு செய்யப்படவுள்ள நிலையில் 22 பாடசாலைகள் குறிப்பிட்ட காலத்திற்கு பயன்படுத்தப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் வினாத்தாள் திருத்தப்பணிகளுக்கு தெரிவுசெய்யப்படும் பாடசாலைகளின் மூன்றாம் தவணை செப்டெம்பர் மாதம் 21ம் திகதி ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment