குற்றப்புலனாய்வு
பிரிவிடம் 4 மணிநேரம்
வாக்குமூலமளித்த
பின்னர் வெளியே வந்த ஷிரந்தி!
சூழ்ந்து கொண்ட மக்கள்
முன்னாள்
ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஸ குற்றப்புலனாய்வு
பிரிவிடம் 4 மணிநேரம் வாக்குமூலமளித்த பின்னர் வெளியே
வந்துள்ளார்.
இதன்போது
ஷிரந்திக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள்,
விசாரணை முடிந்து
வெளியே வரும்
வரை காத்திருந்ததுடன்,
அவரை சூழ்ந்து
கொண்டுள்ளனர்.
இதன்போது
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் ஷிரந்தி
ராஜபக்ஸ மற்றும்
மஹிந்த ராஜபக்ஸவை
பாதுகாப்புடன் அனுப்பி வைத்துள்ளார்கள்.
சிரிலிய
அமைப்பிற்கு வழங்கப்பட்ட டிபென்டர் வாகனம் றக்பி
வீரர் வசீம்
தாஜுதீனின் கொலைக்காக பயன்படுத்தப்பட்டதாக
குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இது
குறித்த விசாரணைகளுக்காகவே
ஷிரந்தி ராஜபக்ஸ
குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இந்த
சம்பவம் தொடர்பில்
ஷிரந்தியிடம் 4 மணிநேரம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
0 comments:
Post a Comment