நீதிமன்ற தடை உத்தரவை கிழித்தெறிந்த சுமனரத்ன
தேரர்
வேலி கம்பை பிடுங்கி எறியவும் முயற்சி!
வாழைச்சேனையில்
பாடசாலை மைதானக்
காணியை மீட்பதற்கு
இன்று மட்டக்களப்பு
மங்கலராம விகாராதிபதி
அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தலைமையில் முன்னெடுக்கப்படட
ஆர்ப்பாட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம்
தொடர்பில் மேலும்
தெரியவருவதாவது,
மட்டக்களப்பு
- முறாவோடை சக்தி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதான
காணியின் ஒரு
பகுதியை சட்டவிரோதமான
முறையில் சிலர்
ஆக்கிரமித்திருந்தனர்.
இதன்போது
குறித்த காணி
வேலியோரம் மட்டக்களப்பு
மங்கலராம விகாராதிபதி
அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தலைமையில் வந்த
பொதுமக்கள் வேலியை தகர்க்க முற்பட்டுள்ளனர்.
இந்த
நிலையில் பொலிஸார்
அவர்களை தடுத்து
நிறுத்தி நீதிமன்றத்தின்
தடை உத்தரவுப்
பத்திரத்தை வேலியில் ஒட்டியுள்ளனர்.
இதனைத்
தொடர்ந்து நீதிமன்ற
தடை உத்தரவை
கிழித்தெறிந்த மட்டக்களப்பு மங்கலராம விகாராதிபதி அம்பிட்டியே
சுமனரத்ன தேரர்
வேலி கம்பை
பிடுங்கி எறிந்த
நிலையில் அவரோடு
வந்த பொதுமக்களும்
வேலியை பிடுங்க
முற்பட்டுள்ளனர்.
வேலியை
பிடுங்க முற்பட்டவர்களை
பொலிஸார் தடுத்த
நிறுத்த முற்பட்ட
போதும் அந்த
முயற்சி பலனளிக்காமையால்
பொலிஸ் பாதுகாப்பு
படையினரால் மட்டக்களப்பு மங்கலராம விகாராதிபதி அம்பிட்டியே
சுமனரத்ன தேரர்
மற்றும் பொதுமக்கள்
தாக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு
இலக்கானவர்கள் மீண்டும் வேலியை பிடுங்கிய போது
பொலிஸார் தாக்குதல்
மேற்கொண்டுள்ளதுடன், இதன்போது பொலிஸாருக்கும்
பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்ட போது
பொலிஸார் கண்ணீர்
புகைக் குண்டை
பிரயோம் செய்து
மோதலை சுமூக
நிலைக்கு கொண்டு
வந்துள்ளனர்.
0 comments:
Post a Comment