மத்திய மகாணத்தில் நியமனம் பெற்ற

527 பட்டாரி ஆசிரியர்களுக்கு திசை முகபடுத்தல்

பா.திருஞானம்

மத்திய மகாணத்தில் அன்மையில் புதிய நியமனம் பெற்ற 527 பட்டதாரி ஆசிரியர்களுக்கு 14 பயிற்சி நிலையங்களில் சேவை பயிற்சி (திசைமுகபடுத்தல்) நடைபெற்றது.
மிக நீண்ட காலத்திற்கு பின்னர் ஒரே தடவையில் மத்திய மாகாணத்தில்;  723 தமிழ் பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கிய போழுதும் நியமனம் பெற்றவர்களில் 527 பட்டதாரிகளே கடமைகளை பொறுபேற்று உள்ளனர்.
மிகுதியான 196 பேரில் பெரும்பாலான  முஸ்லிம் சகோதர பட்டதாரிகள் தங்கள் கடமைகளை பொறுபேற்க்கவில்லை. காரணம் தங்களுக்கு உரிய பாடசாலைகள் வழங்படவில்லை என்பதால் தற்போது இவர்களுக்கும் உரிய பாடசாலைகள் வழங்கி கடமைகளுக்கு இனைத்தக் கொள்ள மத்திய மாகான கல்வி அமைச்சு நவடிக்கைகளை மேற்க கொண்டு வருகின்றது.
தற்போது நியமனம் பெற்று கடமையில் உள்ள 527 பட்டதாரி ஆசிரியர்கள் தங்கள் கடமைகளை பாடசாலைக்குச் சென்று மேற் கொள்ளவும் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற் கொள்ளவும் பயிற்சிகள் வழங்கபட்டு வருகின்றது அதன் ஒரு கட்டமாக கம்பளை கல்வி வலையத்தின் கோட்ட கல்வி பணிப்பாளர் திருமதி எஸ்.துஸ்யந்தி தலைமையில் 52 பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் சேவை பயிற்சி கம்பளை கல்வி வளையத்தில் நடைபெற்றது.

அதன் ஒரு கட்டமாக பாடசாலை கல்வி சுற்றுலா புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரியின் அதிபர் ஆர்.விஜேந்தரன் அவர்களின் ஏற்பாட்;டில் கல்லூரியில் நடைபெற்றது. இதன் போது பட்டதாரி ஆசிரியர்களுக்கு பாடசாலையின் கட்டமைப்பு¸ நிர்வாகம்¸ ஆசிரியர் மணபாங்கு மாற்றம்¸ தலைமைத்தவம்¸ கற்பித்தல்¸ பாடகுறிப்பு¸ நவின கற்பித்தல் முறைமை¸ தொழில்நட்ப யபன்பாடு¸ பாடசாலையின் வள பயன்பாடு¸ இனை பாடவிதான செயற்பாடுகள்¸ கவைத்திட்டம்¸ பாடசாலையின் கமூக தொடர்பாடு¸ கற்றல் கற்பித்தல் மேற்பார்வை¸ போன்ற பல விடயங்களில் பயிற்சிகள் வழங்கபட்டன








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top