சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை
முன்னாள் செயலாளர் ஓய்வு பெற்ற அதிபர்
அல்ஹாஜ் ஏ.எல்.எம்.முகைதீன் ஜே.பி
இஸ்மாலெவ்வை அகமதுலெவ்வை (பொலிஸ் விதானை) அபூபக்கர்லெவ்வை மரியங்கண்டு தம்பதிகளின் 5 ஆவது புதல்வராக ஏ.எல்.எம்.முகைதீன் 1920 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்
20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சாய்ந்தமருதில் பிறந்தார்.
இவர் தனது ஆரம்பக் கல்வியை சாய்ந்தமருது ஆண்கள் பாடசாலையிலும்
இடைநிலைக் கல்வியை காரைதீவு இரம கிருஷ்ண மிஷன் வித்தியாலயத்திலும் கற்று எஸ்.எஸ்.சி.
சித்தியடைந்து 1947.02.01 ஆம் திகதி மட்/ காங்கேயனோடை அரசினர் ரி.பி.எஸ்.இல் உதவி ஆசிரியராக
நியமனம் பெற்று 1948.01.31 ஆம் திகதி வரை அங்கி கடமையாற்றினார்.
9 வருடங்களும் 5 மாதங்களும் ஆசிரியராகவும் 22 வருடங்களும் 1
மாதமும் தலைமை ஆசிரியராகவும் பல பாடசாலைகளில் சிறப்பாக சேவையாற்றியுள்ளார். சாய்ந்தமருதின்
பயிற்றப்பட்ட முதலாவது ஆசிரியர் என்ற பெருமை இவரையே சாரும்.
1979.02.11 ஆம் திகதி சாய்ந்தமருது – மாளிகைக்காடு பள்ளிவாசல்
மரைக்காயராக நியமனம் பெற்ற இவர் 1984.02.12 ஆம் திகதியிலிருந்து செயலாளராகத் தெரிவு
செய்யப்பட்டு 2012.06.01 ஆம் திகதி வரை முழு நேரமும் பள்ளிக் காரியாலயத்தில் இருந்து
செயலாளராக சிறப்பாகக்
கருமமாற்றியவர்.
அமைதியாக இருந்து விடயங்களைத் தொகுத்து
இலக்கணப் பிழைகள் எதுவும் இன்றி அழகாவும் நேர்த்தியாகவும் எழுதும் திறன்
மிக்க இவரால் சிறப்பாக எழுதப்பட்ட கூட்டறிக்கைகளும் கடிதங்களும் ஏனைய ஆவணங்களும்
இன்றும் வழிகாட்டலாக பின்பற்றப்படுகின்றன.
எப்போதும் வுழுவுடனேயே இருப்பார். ஐந்து நேரத் தொழுகையை இமாம் ஜமாஅத்தாக முதல்
ஸப்பில் நின்று தொழுது வருவார்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொள்வானாக, அன்னாருக்கு மேலான
சுவர்க்கத்தை வழங்குவானாக ஆமீன்.
0 comments:
Post a Comment