62 வருடங்களின் பின் தோன்றவுள்ள
முழுமையான சூரிய கிரகணம்
எதிர்வரும் 21 ஆம் திகதி பூரண சூரிய கிரகணம் ஏற்படவுள்ளதாக இலங்கை கோள் மண்டலம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் முழுமையாக காணக்கூடிய வகையில் ஏற்படும் இந்த சூரிய கிரகணம், ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அரைவாசியாக தென்படும்.
1955 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூரிய கிரகணத்திற்கு பின்னர் ஏற்படும் முழுமையான கிரகணம் இதுவாகும். இந்த சூரிய கிரகணம் காரணமாக அமெரிக்காவில் முழு பகலும் இரவாக காட்சியளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை அடுத்த முழுமையான சூரிய கிரகணம் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் திகதி ஏற்படவுள்ளது. இந்த சூரிய கிரகணம் தென் அமெரிக்க பகுதியில் தென்ப்படவிருப்பது முக்கிய அம்சமாகும்.
இதனிடையே அதே வருடம் டிசம்பர் மாதம் ஏற்படும் வலய சூரிய கிரகணத்தை இலங்கையில் தெளிவாக காணமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment