முட்புதரில் வீசப்பட்ட பெண் குழந்தை

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் முட்புதருக்குள் கைவிடப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை  மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் உள்ள உனா என்ற பகுதியில் முட்புதருக்குள் பெண் குழந்தை ஒன்று துணி ஒன்றில் சுற்றப்பட்டுள்ள நிலையில் வீசப்பட்டதில் அந்த குழந்தையின் அழுகுரல் கேட்டு அவ்வழியாக சென்ற ஒருவர் முட்புதருக்குள் இருந்து குழந்தையை மீட்டுள்ளார்.

குழந்தை அந்த புதருக்குள் குப்புறப்படுத்த நிலையில் இருந்துள்ளது. முட்கள் கீறியதால் குழந்தையின் உடம்பில் பல பகுதியில் இருந்து ரத்தம் வழிந்த வண்ணம் இருந்துள்ளது. குழந்தையை மீட்ட அந்த நபர் உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு நடந்தவற்றை எடுத்துக் கூறியுள்ளார்.

இதனையடுத்து விரைந்து வந்த அவசர சிகிச்சைப்பிரிவினர் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.முட்புதருக்குள் வீசப்பட்டிருந்ததால் குழந்தையின் உடம்பில் உள்ள காயங்கள் ஆறி வருவதாகவும் தற்போது உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குழந்தையை முட்புதருக்குள் வீசிச் சென்ற அதன் பெற்றோரை பொலிஸார் தேடி வருகின்றனர். குழந்தையை வேண்டும் என்றே புதருக்குள் கைவிட்டிருப்பதாக கூறும் சமூக ஆர்வலர்கள் குஜராத் உள்ளிட்ட இந்தியாவின் வட மாநிலங்களில் இது வாடிக்கையாகவே நடைபெற்று வருவதாக கூறுகின்றனர்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top