பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கையில்

முக்கியமான மைல் கற்களை சித்தரிக்கும் கண்காட்சி

பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இன்று ஆரம்பம்



பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நான்கு தசாப்த கால அரசியல் வாழ்க்கையின் சிறப்பா தருணங்களை சித்தரிக்கும் கண்காட்சி இன்று 17 ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கண்காட்சியின் அங்குரார்ப்பண வைபவம் இன்று மாலை 3.30க்கு இடம் பெறவுள்ளது..
எதிர்காலத்தை காணும் ரணில் என்ற தொனிப்பொருளில் கண்காட்சி ஏற்பாடாகியுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை முற்பகல் 10 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட முடியும்.

1977ஆம் ஆண்டு இளம் பாராளுமன்ற உறுப்பினராக மக்களவைக்கு சென்ற  பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கையின் அரசியல் களத்தில் தீர்க்கமான வகிபாகத்தை கொண்டிருப்பவர். தமது நான்கு தசாப்த கால அரசியல் பயணத்தில் அவர் ஆற்றிய தேசிய சேவைகளை பாராட்டி கௌரவிப்பது கண்காட்சியின் பிரதான நோக்கமாகும்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top