சட்டை அணியாமல் வெற்று உடம்புடன் ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஏரியில் மீன் பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது.
ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதின் (64). இவர் பன்திறமை கொண்டவர். பல்வேறு சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் கடந்த 1 ஆம் திகதி முதல் 3 ஆம் திகதி வரை கடும் குளிர் நிறைந்த சைபீரியாவில் 3 நாள் விடுமுறையை கழித்தார்.
அப்போது தைவர் பகுதியில் உள்ள மலை ஏரியில் நீச்சல் அடித்தும், மீன் பிடித்தும் மகிழ்ந்தார்.
சைபீரியாவின் கடும் குளிர் நிறைந்த மலை ஏரியில் சட்டை அணியாமல் வெற்று உடம்புடன் அவர் மீன் பிடித்து விளையாடும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
அது குறித்த போட்டோக்கள் மற்றும் வீடியோவை ரஷிய அரசு வெளியிட்டுள்ளது. அது பல்வேறு இணைய தளங்களில் வைரலாக பரவுகிறது.
ரஷியாவில் தற்போது பல்வேறு அரசியல் சிக்கல் நிலவுகிறது. அதற்கு மத்தியில் சைபீரியாவின் தெற்கு பகுதியில் உள்ள டிவா என்ற இடத்தில் புதின் தனது விடுமுறையை கழித்தார். அவருடன் ரஷிய பாதுகாப்பு துறை மந்திரி செர்ஜி சோய்கு மற்றும் அதிகாரிகள் சென்று இருந்தனர்.
0 comments:
Post a Comment