நரம்புத்தொகுதி பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிக்க உதவுமாறு
அமைச்சர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை
நரம்புத்தொகுதி பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிக்கும் திட்டமொன்றை
இலங்கையில் அறிமுகப்படுத்துமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக நரம்பியல் தொகுதி பாதிக்கப்பட்டவர்களுக்கான தெற்காசிய தூதுவர் சைமா ஹுசைனை அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
பங்களாதேஷ்க்கு விஜயம் மேற்கொண்ட ரவூப் ஹக்கீம் கடந்த 30 ஆம் திகதி டாக்காவில் வைத்து அவரை சந்தித்துள்ளார்.
நரம்புத்தொகுதி பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிக்கும் திட்டம் ஒன்றை இலங்கையில் அறிமுகப்படுத்துமாறு மாற்றுத்திறனாளிகளுக்கான தெற்காசிய தூதுவர் சைமா ஹுசைனிடம் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment