கிழக்கு, வடக்கு , வட மத்திய, ஊவா மற்றும்
மத்திய மாகாணங்களில் இடியுடன் மழை
வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு
கிழக்கு , வடக்கு
, வட மத்திய,
ஊவா
மற்றும் மத்திய
மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை
அல்லது இடியுடன்
மழை பெய்யும்
என்று வளிமண்டலவியல்
திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின்
பல பாகங்களில்
வானம் மேகமூட்டத்துடன்
காணக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று
வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வடக்கு மற்றும்
கிழக்கு கடற்கரையோரங்களில்
பல பகுதிகளில்
மழை அல்லது
இடியுடன் கூடிய
மழை பெய்யும்.
புத்தளத்திலிருந்து
கொழும்பு காலி
ஊடாக மாத்தறை
வரையான கரையோர
பகுதிகளில் ஓரளவு மழை பெய்யக்கூடும் என்று
திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வவுனியா
, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அனுராதபுரம்
ஆகிய மாவட்டங்களின்
சில இடங்களில்
மணிக்கு சுமார்
50 தொடக்கம் 75 மில்லிமீற்றர் வரையிலான கனமழை பெய்யக்கூடும்.
இடியுடன்
கூடிய மழையின்
போது பலமான
காற்று தற்காலிகமாக
வீசக்கூடும் . பொதுமக்கள் மின்னலிலிருந்து
தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறு
திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
0 comments:
Post a Comment