தற்போது மலையத்தில் கல்வி புரட்சி ஏற்பட்டு;ள்ளது என்றால் மிகையாகாது. காரணம் படித்த சழூகம் அதிகரித்து வருகின்றமையும் கற்றவர்களும் மலையகத்தில் இருந்து உயர் நிலைக்கு உள்வாங்கபட்டவர்களும் அரசியல் ரீதியாக கல்வி அமைச்சுக்களை பெற்றவர்களும் மலையகத்திற்கு முறையாக சேவை செய்வதாகும். அந்த வகைளில் மலையத்தில் இருந்து கொழுப்பு போன்ற இடங்களுக்கு சென்று வர்த்தகத்தில் உயர் நிலை அடைந்தவர் மலையக கல்வி வளர்ச்சிகக்கு பல்வேறுபட்ட உதவிகளை பல்வேறு அமைப்புகளின் ஊடாக சேவை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் புஸ்ஸல்லாவ கலுகல்ல தோட்டத்தை சேர்ந்த ஐ.வி.எஸ். விஜயன் (ஜே.பி) என்பவர் கொழுப்பில் ஒரு தொழில் அதிபராக செயற்பட்டு வருகின்றார். இவரின் முயற்சியால் உரு பெற்றுள்ள “ஸ்ரீ கல்கி மாணவ சேவா சமித்தின்” மூலம் உடபளாத்த மற்றும் கொத்தமலை பிரதேசத்திற்கு உட்பட்ட ஆண்டு 05 புலமைபரிசில் பரீட்சைக்கு தோற்ற இருக்கும் 1231 மாணவர்களுக்கு புலமைபரிசில் முன்னோடி கருத்தரங்குகளை நாடாத்தி உள்ளது.
இதன் பயனாக உடபளாத்த பிரதேசத்திற்கு உட்பட்ட புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் 275 மாணவர்களும்¸ இந்து தேசிய கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் 206 மாணவர்களும் புப்புரஸ்ஸ கலைவானி தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் 150 மாணவர்களும் கொத்மலை பிரதேசத்தில் பூண்டுலோயா தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் 300 மாணவர்களும் இறம்பொடை இந்து கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் 200 மாணவர்களும் அயரி தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் 150 மாணவர்களும் மொத்தமாக 1231 மாணவர்கள் நன்மை அடைந்துள்ளனர்.
ஸ்ரீ கல்கி; மாணவ சேவா சமித்தின் மூலம் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மாதம் தோரும் இரண்டு மாதிரி வினாத்தாள்கள் பாடசாலைகளுக்கு வழங்கபட்டு வந்தன. அதே போல் தற்போது கல்வி பொது சாதாரணதர மாணவர்களுக்கான முன்னோடி கணிதம¸; விஞ்ஞானம்¸ ஆங்கிலம் மாதிரி வினாத்தாள்கள்; வழங்கபட்டு வருகின்றன. இவர்களுக்கும் நவம்பர் மாததில் கருத்தரங்குகள் நடாத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இருதியில். இந்த செயற்பாட்டின் ஊடாக புலமைபரிசில் பரீட்சையிலும் கல்வி பொது சாதாரணதர பரீட்சையிலும் பல்கலைகழகங்களுக்கு தெரிவாகுபவர்களுக்கும் அவற்றுக்கு காரணமாக இருந்த அதிபர்கள், ஆசியர்களும்; கௌரவிக்கபடவுள்ளனர்.
(பா.திருஞானம்)
0 comments:
Post a Comment