விரைவில் பதவி விலகுவார் ரவி கருணாநாயக்க?
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க அடுத்த வாரம் பதவி விலகுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மஹிந்த அணியினரால் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னர் அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலகுவார் என ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை ரவி கருணாநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன
0 comments:
Post a Comment