மக்கள் வங்கியின் ஏற்பாட்டில்
தரம் ஐந்து புலமைப்பரிசில்
வழிகாட்டல் கருத்தரங்கு
மக்கள் வங்கி வவுனியா கிளையின் ஏற்பாட்டில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட வழிகாட்டல் கருத்தரங்கு இடம்பெற்றுள்ளது.
குறித்த கருத்தரங்கு இன்று மக்கள் வங்கியின் வன்னி பிராந்திய முகாமையாளர் சிவா சிவக்கொழுந்தின் தலைமையில் வவுனியா கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
ஜி.ஐங்கரன் (வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்), கே.ஆர்.கமலநாதன் (பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் விரிவுரையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் 1000க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் வவுனியா மக்கள் வங்கி முகாமையாளர் கு.கோடிஸ்வரன், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், மக்கள் வங்கி பிராந்திய மற்றும் வவுனியா கிளை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment