டுபாயில் அடுக்கு மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து
உலகின்
மிகவும் உயரமான
கட்டிடங்களில் ஒன்றான டுபாயில் உள்ள டார்ச்
டவரில் பயங்கர
தீ விபத்து
ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டுபாயின்
Marina பகுதியில் சுமார் 1,105 அடி உயரம் கொண்ட,
உலகில் மிகவும்
உயரமான கட்டிடங்களில்
ஒன்றான Torch டவரில் பயங்கர தீ விபத்து
ஏற்பட்டுள்ளது. இது உள்ளூர் நேரப்படி அதி காலை 1 மணி அளவில்
ஏற்பட்டுள்ளது.
கட்டிடத்தின்
9-வது மாடியில்
இருந்து தீப்பற்றி
எரிந்து கொண்டு
அப்படியே அடுத்தடுத்து
பரவி வருவதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
டார்ச்
டவர் உலகின்
மிகவும் உயரமான
கட்டிடங்களில் ஒன்று எனவும், 1,105 அடி உயரம்
கொண்ட இந்த
கட்டிடம் 2011-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது என்றும்
பெப்ரவரி 2015-ஆம்
ஒரு தீ
விபத்து ஏற்பட்டதாகவும்,
அதில் யாருக்கும்
எந்த ஒரு
பெரிய பாதிப்பும்
ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
இச்சம்பவம் தொடர்பான வீடியோவை அங்கிருக்கும் மக்கள்
வீடியோவாக எடுத்து
சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து
வருகின்றனர்.
அவர்கள்
தங்கள் டுவிட்டர்
பக்கத்தில் இந்த தீ விபத்தின் காரணமாக
அப்பகுதியில் மின்சாரம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக
தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment