200 அடி பள்ளத்தில் பாய்ந்து


நீர்த்தேக்கத்திற்குள் வீழ்ந்த கார்

விபத்தில் சிக்கி இளைஞனும் யுவதியும் பலி

லிந்துலை மற்றும் தலவாக்கலை ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை பெயார்வெல் பகுதியில் மாலை 3 மணியளவில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி 200 அடி பள்ளத்தில் மேல் கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர்வழங்கும் ஆக்ரோயா ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனனர்.
லிந்துலை மற்றும் தலவாக்கலை ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை பெயார்வெல் பகுதியில் மாலை 3 மணியளவில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி 200 அடி பள்ளத்தில் மேல் கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர்வழங்கும் ஆக்ரோயா ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் கம்பஹா பகுதியை சேர்ந்த பியூமிசாந்த் பிரசாதி பெரேரா வயது 24 எனும் யுவதியும்உயிரிழந்த இளைஞன் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
நுவரெலியா பகுதியிலிருந்து கம்பஹா பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதுகாரில் இளைஞரும்யுவதியும் மட்டும் பயணித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதோடுஉயிரிழந்த இருவரின் சடலங்களும் லிந்துலை வைத்தியசாலையின் பிரேதை அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை லிந்துலை மற்றும் தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.











0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top