சிறுவர்களை வியாபார நடவடிக்கைகளில்
ஈடுபடுத்துவோரை அறியத்தருமாறு
சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை
பொதுமக்களிடம் வேண்டுகோள்
சிறுவர்களை
வியாபார நடவடிக்கைகளில்
ஈடுபடுத்துவோர் தொடர்பில் அறியத்தருமாறு சிறுவர் பாதுகாப்பு
அதிகாரசபை பொதுமக்களை
கேட்டுக் கொண்டுள்ளது.
பணம்
சம்பாதிக்கும் நோக்கத்தில் சிறுவர்களை வர்த்தக நடவடிக்கைகளில்
ஈடுபடுத்துவோர் பற்றி அறியத்தருமாறு சிறுவர் பாதுகாப்பு
அதிகாரசபை மக்களை
கேட்டுக் கொண்டுள்ளது.
வர்த்தக
நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் சிறுவர்கள்
பற்றி கண்டறிவதற்காக
நாடு முழுவதும்
பல்வேறு இடங்களில்
விசேட தேடுதல்
நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சிறுவர்களின்
பெற்றோராகவோ பாதுகாவலராகவோ இருப்பினும் அவர்கள் சிறுவர்களை
பணம் சம்பாதிக்கும்
பணியில் ஈடுபடுத்த
முடியாது. சில
இடங்களில் சிறுவர்களை
காண்பித்து அவர்களுக்கு கடும் நோய்கள் இருப்பதாகக்
கூறி, பணம்
சேகரிக்கின்றனர். அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பது தண்டனைக்குரிய
குற்றமாகும்.
இதுதொடர்பில்அருகில்
உள்ள பொலிஸ்
நிலையத்திலோ அல்லது இலங்கை சிறுவர் பாதுகாப்பு
சேவையின் 1929 என்ற தொலைபேசி ஊடாகவோ அறிவிக்க
முடியும்.
0 comments:
Post a Comment