ரோஹிதவின் திருமணத்தில்
கலந்து கொண்ட சர்ச்சைக்குரிய நபர்!
ஆதாரம் அம்பலம்
அண்மையில்
திருமண பந்தத்தில்
இணைந்து கொண்ட
ரோஹித ராஜபக்ஸ மற்றும் டட்யானா திருமணத்தில் சர்ச்சைகுரிய
நபர் கலந்து
கொண்டதற்கான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை
மத்திய வங்கியின்
முறி முறைக்கேடு
தொடர்பில் விளக்கமறியலில்
வைக்கப்பட்டிருந்த அர்ஜுன் அலோசியஸ்
கலந்து கொண்ட
புகைப்படங்களே வெளியாகியுள்ளன.
இந்த
திருமணத்தில் அர்ஜுன் அலோசியஸ் கலந்து கொண்டிருந்ததாக
பிரதி அமைச்சர்
ரஞ்சன் ராமநாயக்க
பகிரங்கமாக குற்றம் சுமத்தியிருந்தார்.
எனினும்
அதனை நிராகரித்த
நாமல் ராஜபக்ஸ,
முடியும் என்றால்
புகைப்படங்களுடன் நிரூபிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
பம்பலப்பிட்டி
தேவாலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்ற ரோஹிதவின்
திருமண நிகழ்வில்
அர்ஜுன் அலோசியஸ்
கலந்து கொண்டிருந்தார்
என்பதற்கான ஆதாரம் வெளியாகியுள்ளது.
0 comments:
Post a Comment