ஞானசார தேரரின் விடுதலையில் ஏற்பட்ட திடீர் திருப்பம்
சிறையில்
அடைக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர்
கலகொடஅத்தே ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவுள்ளார்.
அவருக்கு
விதிக்கப்பட்ட 6 மாத கடூழிய சிறை தண்டனை
5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட தண்டனையாக
மாற்றப்பட்டுள்ளது.
ஹோமாகம
நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பே இவ்வாறு இன்று
மாற்றப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்
எக்னலிகொடவின் மனைவியை அச்சுறுத்திய வழக்கில் விதிக்கப்பட்ட
6 மாதகால கடூழிய
சிறை தண்டனை
எதிர்த்து ஞானசார
தேரோவினால் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று
வெளியிடப்பட்டது.
இதன்படி
அவருக்கு விதிக்கப்பட்ட
6 மாத கடூழிய
சிறை தண்டனை
5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட தண்டனையாக
மாற்றப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment