தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தியில்
அக்கறை காட்டும் பிரதமர்
யாழ்.ஸ்கந்தவரோதயா
கல்லூரியின்
125ஆவது ஆண்டு
நிறைவு தின விழாவில்
பிரதம விருந்தினராக இன்று பங்கேற்பு
யாழ்.ஸ்கந்தவரோதயா கல்லூரியின்
125ஆவது ஆண்டு
நிறைவு தின
விழா கல்லூரி
அதிபர் எம்.செல்வஸ்தன் தலைமையில்
இன்று காலை
ஆரம்பமாகியது. இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க
பிரதம விருந்தினராக
கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.
பாடசாலைக்கு
வருகை தந்த
பிரதமரை மங்கள
வாத்தியங்கள் முழங்க, பாடசாலை மாணவர்கள் வரவேற்றதோடு,
பாடசாலை மாணவர்களின்
நடன நிகழ்வுகளுடன்
பிரதான மண்டபத்திற்கு
அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
தொடர்ந்து,
தமிழ் மொழியில்
தேசிய கீதமும்,
பாடசாலை கீதமும்
இசைக்கப்பட்டது.
55 மில்லியன்
ரூபாய் நிதியில்
நிர்மாணிக்கப்பட உள்ள பாடசாலை கேட்போர் கூடத்திற்கான
அடிக்கல்லினை நாட்டி வைத்ததுடன், பெயர்ப்பலகையை திரை
நீக்கமும்செய்து வைத்துள்ளார்.
இதன்போது
2018ஆம் ஆண்டுக்கான
கல்வி பொது
தரதார உயர்தர
மற்றும் சாதாரண
தர பரீட்சையில்
சிறந்த புள்ளிகளை
பெற்ற மாணவர்களுக்கு
காசோலைகளும் பிரதமரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த
நிகழ்வில் கல்வி
இராஜாங்க அமைச்சர்
விஜயகலா மகேஸ்வரன்,
நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம்
சித்தார்த்தன், ஈ.சரவணபவன் உட்பட ஐக்கிய
தேசியக் கட்சியின்
உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்
எனப் பலரும்
கலந்து கொண்டிருந்தனர்.
0 comments:
Post a Comment