முஸ்லிம் நாடாளுமன்ற
உறுப்பினர்கள்
தமக்கான அமைச்சுப்
பதவிகளை
மீண்டும் ஏற்பதில்
ஹரீஸ் எம்.பியின்
நிலைப்பாட்டால்
தாமதம்
பதவிகளை இராஜினாமாச் செய்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கான
அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தரப்பில்
இருந்து அழைப்புக்கள் விடுக்கப்பட்டு இவர்கள் இன்று மாலை அமைச்சுப் பொறுப்புக்களை
ஏற்பதாக இருந்தது.
இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
எச்.எம்.எம்.ஹரீஸ் தனது இராஜாங்க அமைச்சுப் பதவியை மீண்டும் பொறுப்பேற்கப்போவதில்லை
என்று கூறியுள்ள நிலையில் இன்றைய அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்கும் நிகழ்வு
தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இன்று கொழும்பில் நடைபெறவுள்ள முஸ்லிம் காங்கிரஸின் விசேட கட்சிக் கூட்டத்தில்
நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின்
நிலைப்பாடு குறித்து ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக்கூட்டத்தில்
எடுக்கப்படும் முடிவுக்குப் பின்னர் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பெடுப்பது குறித்து
இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,
முஸ்லிம் அமைச்சர்கள்அனைவரும் ஒன்றாகவே பதவி
விலகினோம். அதுபோன்று பதவிகளை மீண்டும் பொறுப்பேற்பதென்றாலும் ஒன்றாகவே பொறுப்பேற்போம்.
பிக்குவுக்கு
பயந்து நாம் பதவி விலகவில்லை நாட்டின்மீதும் எங்கள் மக்கள்மீதும் உள்ள பற்று காரணமாகவே
நாம் அமைச்சுப்பதவிகளை விட்டு விலகினோம் என்று முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment