பஸ் சாலையோரம் தலைகிழாகக் கவிழ்ந்து
15 சுற்றுலாப் பயணிகளை பலி
சுற்றுலாப் பயணிகளுடன் அதிவேகமாக சென்ற பஸ் சாலையோரம் தலைகிழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியாகினர். இந்த சம்பவம் மெக்சிகோவில் இடம்பெற்றுள்ளது.
மெக்சிகோவின் அகஸ்காலியன்ட்ஸ் மாநிலத்தில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று ஒரு பஸ் புறப்பட்டுச் சென்றது.
மலைப்பாங்கான நயாரித் மாநிலத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பட்டை இழந்து வேகமாக சென்ற பஸ், திடீரென சாலையோரம் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உள்ளூர் நேரப்படி நேற்று காலை 7 மணியளவில் இந்த விபத்து நடந்தது.
விபத்து குறித்து தகவல் அறிந்த பொலிஸார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், குழந்தைகள் உள்ளிட்ட 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 21 பேர் பலத்த காயமடைந்தனர்.
பஸ் கடுமையாக சிதைந்திருந்ததால், பல மணி நேரம் போராடி இடிபாடுகளில் சிக்கியிருந்த உடல்களை தீயணைப்பு வீரர்கள் வெளியே எடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment