காத்தான்குடி நகர சபையின் ஏற்பாட்டில்
சிட்டி பொல வர்த்தக சந்தை
காத்தான்குடியில் ஆரம்பித்து வைப்பு.

காத்தான்குடி நகர சபையின் ஏற்பாட்டில் இனங்களுக்கு மத்தியில் நல்லுறவை கட்டிஎழுப்பும் வகையில் காத்தான்குடி பிரதான வீதி மீராபாலிகா பெண்கள் கல்லூரி முன்பதாக "சிட்டி பொல" வாராந்த சந்தையொன்று இன்று காலை ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற வைபவத்தில் முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக பங்கேற்று "சிட்டி பொல" வாராந்த சந்தையினை திறந்துவைத்தார்.
நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதயசிறீதர் உள்ளிட்ட நகர சபையின் பிரதி தவிசாளர் எம்.ஐ.ஜெசீம் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் என முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றனர்.
இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள "சிட்டி பொல" சந்தை வாரத்தில் சனிக்கிழமைகளில் தொடர்ந்து இயங்கும் எனவும் இன மத மொழி கடந்து வியாபாரிகள் இங்கு வந்து தமது வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடமுடியும் என காத்தான்குடி நகர சபை தெரிவித்துள்ளது.








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top