மினிபஸ் கவிழ்ந்து விபத்து
- 17 பேர் பலி
  
சட்டவிரோதமாக அகதிகளை ஏற்றிச்சென்ற மினிபஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் துருக்கி நாட்டில் இடம்பெற்றுள்ளது.

துருக்கி நாட்டின் எல்லை வழியாக ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவை சேர்ந்த அகதிகள் சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொள்பவர்களை தடுக்க  ஈரான் தனது எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், துருக்கி-ஈரான் நாடுகளின் எல்லையை ஒட்டிய வேன் என்ற பகுதியில் மினி பஸ் ஒன்று 67 அகதிகளை ஏற்றிக்கொண்டு சட்ட விரோதமாக இன்று சென்று கொண்டிருந்தது. மலைப்பாங்கான நிலப்பரப்பை பஸ் கடந்தபோது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் மினி பஸ்ஸில் பயணம் செய்த ஐந்து குழந்தைகள் உட்பட 17 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top