கண்டி – மொனராகலை
பஸ்ஸில் எழுதப்பட்டுள்ள
தமிழ் கெட்ட வார்த்தை!
இலங்கையில்
தமிழ் மொழிபெயர்பப்புக்கள்
செய்யப்படுகின்றபோது கன்னாபின்னா என்று
பிழைகள் விடுவது
வழமை. மொழிபெயர்ப்பின் போது எழுத்துப் பிழைகள் விடுவது
சில சந்தர்ப்பங்களில்
பிழையான அர்த்தங்களையே
வெளிக்காண்பித்துவிடும்.
இது
“மொனராகலை”, 'கண்டி' என்ற ஊருக்குச்
செல்லும் பஸ். ஒரு பஸ்ஸில் “மொனராகலை” என்பதற்கு “மரணகலாய்“ என்றும் 'கண்டி' என்பதற்கு
பதிலாக “வண்டி“ என்றும் மற்றொரு பஸ்ஸில் 'கண்டி' என்பதற்கு பதிலாக “குண்டி“என்றும் ஊரின் பெயர் எப்படி
எழுதப்பட்டிருக்கின்றது.
தேசிய
சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் தேசிய மொழிகள் அமைச்சு என்று தனியாக
அமைச்சு ஒன்று எமது இலங்கை நாட்டில் இருக்கும் நிலையில் இந்த தமிழ் மொழிபெயர்பப்புக்களைப் பார்த்து தலையில் அடித்துக்கொள்ளுங்கள்!!
0 comments:
Post a Comment