இது  குளவி  குத்தியதற்கு வைத்தியம் செய்த சம்மாந்துறை அன்பர் ஒருவரின் அனுபவம்…..

சம்மாந்துறை வைத்தியர்கள் ஒவ்வாமைக்கான
ஊசியை போடாமல் விரட்டியமையும்
கல்முனை வைத்தியர்கள் நன்றாக கையாண்டமையும்!

2019-07-13 ஆம் திகதி காலை 9.30 மணியளவில் எனது தோட்டத்திற்கு நீர்பாய்ச்சும் நோக்கத்துடன் குளித்துக்கொண்டிருந்த போது குளவி கண்ணோரமும் உதடு, தலை மற்றும் கழுத்துப் பகுதியில் கூட்டமாக குத்தி விட்டது.துடித்துப்போய் எனது தாய், சகோதரியிடம் இதனைச் சொல்ல அவர்கள் வீட்டிலிருந்த பழப்புளியை அன்பு கலந்து அள்ளிப் பூசிவிட்டார்கள். இருந்தாலும் கண்ணெரிச்சலும், வீக்கமுமாக இருந்ததால். அன்புக்குரிய வைத்தியர் ஒருவரை தொடர்பு கொண்டு விடயத்தை சொன்னபோது அவர் சொன்னார் உடனே ,பி,டீ,க்கி போய் ஒரு ஊசி போடும்படி சொல்ல. நானும் முகம் வீங்கினா அசிங்கமாகப் போய்விடுமே என்ற அச்சத்தில் உதவிக்கி வர இருந்த எனது  மச்சானையும் விட்டுவிட்டு பறந்தடிச்சி வைத்திய சாலைக்கு வந்து. opd துண்டை வாங்கிக்கொண்டு வரிசையில் இருந்தவர்களிடம் விடயத்தைச் சொல்லி அனுமதியைப் பெற்றுக் கொண்டு வைத்தியரைப் பார்த்தபோது வைத்தியர் இருக்கவில்லை.சிறிது தாமதித்து வைத்தியப் பெண் வந்திருந்தார் அவரிடம் விடயத்தை முடியுமான வரை சகோதர மொழி சிங்களத்தில் கூறினேன் பாழாப் போன எனக்கு குத்திய குழவியின் பெயர் வாயால் வராமப்போச்சு பக்கத்துல உதவிக்கு நின்ற தாதிக்கும் அது முடியல்ல வைத்தியர் இன்னுமொரு உதவியாளரை அழைத்த போது அவர் தொலைபேசி அழைப்பில் இருப்பதாகச் சொன்னார் அதற்குள் வைத்தியப் பெண் என்னை அவசர சிகிச்சை பிரிவுக்குள் போகும்படி கூறினார். நான் அவசர சிகிச்சை பிரிவுக்கு வந்த பொது கடுமையாக நின்றிருந்தார் ஒரு காவலாளி அவரிடம் துண்டைக் காட்டி வைத்தியர்தான் உள்ளே செல்லச்சொன்னார் எவ்வளவு சொல்லியும் கேட்டபடி இல்லை, எனது வாதத்தை அவதானித்த மற்றுமொரு
வைத்திய ஊழியர் விடயத்தை விசாரித்து உள்ளே அனுமதித்தார்.அப்பாடா எப்படியோ தனக்கு அவசர சிகிச்சை நடக்கும் என்ற ஆதங்கத்துடன் உள்ளே நுழைந்தேன்.உள்ளே ஒரு வைத்தியர் ஓய்வறையில் இருப்பதுபோல் போனும் கையுமாக இருந்தார் அவரிடம் அழகுத் தாய் தமிழில் சொன்னபோது அவர் இருந்த வாக்கில் தமிழில் விடயத்தை விழுங்கிவிட்டு இது கண் சம்மந்தப்பட்டதால் இங்கு கண் வைத்தியர் இல்லை நீங்கள் கல்முனை வடக்கு வைத்தியசாலைக்கு அல்லது AMH.கு போகும்படி சொன்னார்.

நான் குழைந்துகொண்டு இன்று ஜும்ஆ நேரம் போகுது என்றேன் அவர் இல்லை அவசரமாக போகும்படியும் அதற்காக அதிக வேகமாப் போய் விழுந்துக்காதிங்கள் என புத்திசொல்லி அனுப்பிவிட்டார்.நானும் ஏமார்த்தமாய் வெளிய வந்து சரியான கண்டிஷன் இல்லாத பைக், சைக்கிளுக்கு ஆவணம் இல்லை, எனக்கும் எந்த ஆவணமும் இல்லை, உதவிக்கு வரவிருந்த மச்சானும் இல்லை, தவக்கல்து அலல்லாஹ் கல்முனை நோக்கி பயணிக்கிறேன்.இருந்தாலும் காரைதிவால் போகாமல் பண்டு வீதியால் சென்று AMH குள் நுழைகிறேன் விபரத்தை opd. இல் சொல்ல உடன் அனுமதிக்கின்றார் அந்த ஊழியர் அவசர சிகிச்சை பிரிவுக்குள். நுழைந்தவுடன் விபரத்தை கேட்ட மாத்திரத்தில் கட்டிலில் உட்காரவைக்கப்பட்டேன் பெருவிரலில் ஒரு கிளிப் மாட்டப்படுகிறது வலதுகையில் குருதி அழுத்தத்தை சரி பார்க்க சுத்தப்படுகிறது அப்போதுதான் நான் விசாரிக்கப்படுகிறேன்.ஒரு பெண் வைத்தியர் எனது கண்ணைத்தொட்டு நீக்கி நாலாபுறமும் பார்க்கவைத்து அவதானிக்கும்போதுதான் நான் சொன்னேன் நான் சம்மாந்துறை வைத்தியசாலைக்குச் சென்றேன் அவ்ர்கள் கண் வைத்தியர் இல்லை என்று என்னை இங்கு அனுப்பியுள்ளார்கள் என்றேன். அந்த வைத்தியர் சிரித்துக் கொண்டு சொன்னார் குழவி குத்தினத்துக்கு அலஜிக் ஊசியைப்போட்டு அனுப்பாமல் இவ்வளவு தூரம் இந்த பேசண்ட அனுப்பியிருக்கிறார்கள் என்று சகாக்களுடன் பேசியிருக்கும்போது உள்ளுக்குள் ஒரு வலி எனக்கும் அது அசடுதான்.

சுதாகரித்துக்கொண்டு நானும் சேர்ந்து சிரிப்பை கஷ்டப்பட்டு அழைத்துக்கொண்டேன்.ஊசி அடிக்கப்படுகிறது,விரல் கிளிப் களத்தப்படுகிறது எதுக்கும் அவசரமாக கண்வைத்தியர் போய்விடுவார் போய்ப் பாருங்கள் என்று தந்தார்கள் ஒரு சீட்டை எடுத்துக்கொண்டு ஓடினேன். கண் வைத்தியப் பெண் எழும்பும் நேரம் கடைசிப் பேசண்டாக காட்டினேன் கண்ணை, கண்ணைப் பார்த்த மெஷின் எனது தாய் சொன்னதையே சொன்னது, அல்லாஹ் ஒரு ஆபத்துமில்லாம கண்ண காப்பாற்றி விட்டான்.மீண்டும் வருகிறேன் அவசர சிகிச்சை பிரிவுக்குள் ஒரு தாதி எனது விலாசத்தைப் பதிகிறார் வைத்தியர் மாத்திரை எடுக்கும்படி துண்டைத் தருகிறார்.இறுதியாக என்னுடன் ஒரு தாதி வெளிய வந்து OPD இல் எனது பெயர், வயது, ஓடர் இலக்கம் போடப்பட்ட சீட்டை கொண்டு செல்கிறார் தாதி. நான் மாத்திரை எடுத்துக்கொண்டு வீதிப்போக்குவரத்துப்பொலிஸாரின் கண்ணில் படாதவாறு மீண்டும் வண்டு வழியாக ஊர் வந்து சேர்ந்து சம்மாந்துறை ஹிஜ்ரா பள்ளி ஜும்ஆவுக்கு செல்லக்கிடைத்தது அல்ஹம்துலில்லாஹ்.

இதை நான் ஏன் நன்பர்களுடன் பகிர்கிறேன் என்றால் எனக்கு இதற்கு முன்னும் இதைவிட மோசமான பல நிகழ்வுகளை அவதானித்தவன் என்றாலும் அவற்றை பதிவிட்டு ஊர்மானம் போகக்கூடாது என்று எண்ணியிருந்தேன்,

பலவருடம் கழித்தும் இப்படியே இருந்தால் எப்படி. என்ற ஆதங்கத்தால்  இதனை எழுதிவிட்டேன்.

இதில் பல விடையங்கள் கூறப்பட்டாலும் இவைகள் பற்றி நாகரிகமான பின்னூட்டங்கள் மூலமாக ஆரோக்கியமான கருத்துக்களை நஸ்றுதீன் நஸீர் எதிர்பார்க்கிறார்...




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top