நல்லாட்சியை உருவாக்குவதற்காக
மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள்
நிறைவேற்றப்பட்டதா ?

நல்லாட்சி அரசாங்கத்தை பிரதானமாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் பல வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கப்பட்டு உருவாக்கப்பட்டது ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தின் நான்கு வருடங்கள் கடந்தும் இன்னும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா என்று சிந்தித்துப் பார்க்கும்போது..!!!!

வாக்குறுதிகள்
--------------------------
ஊழல்களை முற்றுமுழுதாக ஒழிப்போம்
இவ்வாறு உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம்
பினை முறி விவாகரத்தில் மாட்டிக்கொண்டது.

அரச பணத்தை வீண்விரயம் செய்த மஹிந்த ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ, கோத்தபாய ராஜபக்ஸ உட்பட ராஜபக்ஸச குடும்பத்தின் ஊழல்களை வெளிப்படுத்தி தண்டனை வழங்குவோம்
ஆனால் என்ன நடந்தது மஹிந்த ராஜபக்ஸவின் குடும்ப உறுப்பினர்கள் யாரும் இதுவரை குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்படவில்லை தண்டனையும் வழங்கப்படவில்லை.

வசீம் தாஜுதீனின் கொலைக்கு காரணமாக இருந்தவர்களுக்கு தண்டனை வழங்குவோம்
இதுவரையும் வசீம் தாஜுதீனின் கொலை குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்படவில்லை

இனவாதிகளால் தாக்கப்பட்ட அளுத்கம மக்களுக்கு நிவாரணம் வழங்குவோம்
இன்று வரை முழுமையான நிவாரணம் இதுவரை வழங்கப்படவில்லை

இனவாத செயற்பாடுகளை முற்றுமுழுதாக ஒளித்து இனவாதிகளை அடக்குவோம்
இன்று வரை பல இனவாத நடவடிக்கைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது திகன, அம்பாரை, குருநாகல், மினுவாங்கொடை, என்று அதிகரித்து செல்லுகிறது எந்த நடவடிக்கையும் இல்லை

ஞானசார தேரரை நாய்க் கூட்டில் அடைப்போம்
பூனைக் கூட்டில் கூட அடைக்கவில்லை ஆனால் சிறையிலடைக்கப் பட்ட ஞானசார தேரரை விடுதலை செய்யும்படி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிக்கு பரிந்துரை

தம்புள்ளை பள்ளிவாசல் கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்போம்
இதுவரை முழுமையாக பிரச்சினை தீர்க்கப்படவில்லை

முஸ்லிம் மக்களின் ஜனநாயக ரீதியான உரிமைகள் பாதுகாக்கப்படும்
முன்னே அரசாங்கத்தைவிட முஸ்லிம் மக்களின் ஜனநாயக ரீதியான உரிமைகளுக்கு பல சவால்கள் ஏற்பட்டு உள்ளது

10 லட்சம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவோம்
இதுவரை ஒரு லட்சம் வேலைவாய்ப்புகளும் ஒழுங்காக கொடுத்து முடிக்கப்படவில்லை

பொருளாதார ,அபிவிருத்திகளை ஏற்படுத்தி நாட்டில் பாரிய அபிவிருத்திகளை செய்வோம்
கடந்த மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது கடனுதவிகள் அதிகமாக பெறப்பட்டுள்ளது அபிவிருத்திகள் நடைபெறவில்லை

நூறு நாள் வேலைத் திட்டத்தில் பொருட்களின் விலை குறைந்தது ஆனால் தற்பொழுது முன்பைவிட அதிகமாக காணப்படுகிறது

நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள்
-------------------------------

ஊடக சுதந்திரம் பரவலாக்கப்பட்டது

வெள்ளை வேன் கலாசாரம் இல்லாமல் செய்யப்பட்டது

கிரீஸ் மனிதன் பிரச்சினை இல்லாமல் ஆக்கப்பட்டது

அமெரிக்கா ,இஸ்ரேல் போன்ற சர்வதேச நாடுகள் இடையில் உறவுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது

நல்லாட்சி அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளை சிந்தித்து பார்க்கும் பொழுது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் பெரும்பான்மை நிறைவேற்றப்படாமல் மக்கள் இன்று ஏமாற்றப்பட்ட சூழ்நிலையில் காணப்படுகின்றனர்

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியையும் ஜனாதிபதி ரணிலையும் மாறி மாறி குற்றம் சுமத்தி காலத்தைக் கடத்துகின்ற தனது சுக போகத்தை இருவரும் அனுபவிக்கின்ற அரசாங்கமாக இது மாறிவிட்டது.

மேலும் சிறுபான்மை மக்களுக்கு பல சவால்களும் பிரச்சினைகளும் அதிகரித்துள்ளது நல்லாட்சியை உருவாக்குவதற்கு காரணமான முஸ்லிம் தமிழ் சிறுபான்மை மக்களின் எந்த தேவைகளும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை

ஆகவே தொடர்ந்து இந்த ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி உருவாக்குவதற்கு காரண கர்த்தாவாக இருந்த ரணில் தலைமையில் மீண்டும் மக்களிடம் ஒரு ஆட்சியை உருவாக்குவதற்கு வாக்குறுதிகளை கேட்டு வந்தால் விசேடமாக முஸ்லிம் தலைவர்கள் அதற்கு ஆதரவு வழங்கக் கூடாது

ஏனென்றால் ஞானசார தேரர், ரத்ன தேரரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாமல் கழுவுகிற மீனில் நழுவுகிறது போன்று செய்யப்படுகின்ற இந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கினால் தொடர்ந்து எமது முஸ்லிம் சமூகம் கேட்பாரற்ற நாதியற்ற சமூகமாக எதிர்காலத்தில் மாறும் என்பதில் அச்சமில்லை

ஆகவே முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தமட்டில் ஆட்சி செய்யும் நபர்கள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை ஆகையால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பு மாற்றப் பட வேண்டும் அதேபோன்று மஹிந்த ராஜபக்ஷவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று அவதானிக்க வேண்டும் இவ்வாறான சரியான அவதாரங்களுடன் எதிர்கால அரசியலை உருவாக்க வேண்டியது முஸ்லிம் அரசியல் தலைவர்களின் கடமையாகும்.
-    மருதூர் ஸக்கீ செய்ன்






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top