ஐக்கிய நாடுகள்
அமைதிப்படையில்
கடமையாற்றுவதற்காக
தென் சூடான் நோக்கி புறப்பட்டுள்ள
இலங்கை இராணுவக் குழு
ஐக்கிய
நாடுகள் அமைதிப்படையில்
கடமையாற்றுவதற்காக இலங்கை இராணுவத்தின்
61 பேர் கொண்ட
அணி தென்
சூடான் நோக்கி
புறப்பட்டுச் சென்றுள்ளதாக இராணுவத்தின் ஊடகப் பிரிவு
தெரிவித்துள்ளது.
குறித்த
அணியினர் இன்று அதிகாலை இவ்வாறு
பயணமாகியுள்ளனர்.
11 இராணுவ
அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினரை கொண்ட அணியே
தென் சூடான்
சென்றுள்ளது.
இவர்களில்
பெரும்பாலானோர் இராணுவ மருத்துவ மற்றும் இராணுவ
போக்குவரத்து பிரிவின் அதிகாரிகள் எனவும் இராணுவத்தின்
ஊடகப் பிரிவு
குறிப்பிட்டுள்ளது.
இந்தக்குழுவிலுள்ள
பெரும்பான்மையானவர்கள் மருத்துவப் பிரிவு
படையணியை சேர்ந்தவர்கள்
என்பதோடு, அவர்களில்,
பொறியியல் சேவை,
தொண்டர் படையணி,
சிக்னல் பிரிவை
சேர்ந்த அதிகாரிகளும்
உள்ளனர்.
தெற்கு
சூடானில் உள்ள
இராணுவ மருத்துவமனையை
ஒரு வருட
காலத்திற்கு பராமரிக்கும் பணியை இவர்கள் ஏற்பார்கள்
எனவும் தெரியவருகின்றது.
இதேவேளை,
ஏற்கனவே சூடானுக்கு
அனுப்பப்பட்டுள்ள 50 பேர் கொண்ட
இலங்கை படைப்பிரிவு
அவர்களின் பதவிக்காலம்
முடிந்ததும் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment