அட்டுளுகம பிரதேச முஸ்லிம்  பெண்ணின்
முறைப்பாடு தொடர்பில் விசாரணை
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் சேகர தெரிவிப்பு



பண்டாரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டுளுகம பிரதேசத்தில் முஸ்லிம் பெண்ணொருவருக்கு இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் அநீதிகள் குறித்து, பண்டாரகமை பொலிஸ் நிலையத்தில் அறிக்கை கோரியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் சேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று (3) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சிங்கள பௌத்தர் ஒருவரைத் திருமணம் முடித்த பின்னர், அப்பிரதேச முஸ்லிம் மக்களால் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக நேற்றைய தினம் பொதுபல சேனா அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட 38 வயதுடைய பெண் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top