இரகசிய பொலிஸாரின் அறிக்கையில்
ரிஷாத் நிரபராதியென தெரிவிப்பு
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
ஈஸ்டர்
ஞாயிறு குண்டுத்தாக்குதல்
தொடர்பில் விசாரணைகளை
மேற்கொண்ட ரகசிய பொலிஸார் முன்வைத்துள்ள
அறிக்கையில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்
நிரபராதி எனத்
தெரிவிக்கப்பட்டநிலையில் பாராளுமன்றம் அந்த அறிக்கையை
அடிப்படையாக வைத்து செயற்பட முடியும் என
பிரதமர் ரணில்
விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கிண்ணியாவில்
நேற்று இடம்பெற்ற
நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு
தெரிவித்துள்ளார்.
முன்னாள்
அமைச்சர் ரிஷாத்
பதியுதீனுக்கு எதிராக 300குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தாலும்
அதில் பெரும்பாலானவை
எந்தவொரு அடிப்படையும் இல்லாதவை.
சில குற்றச்சாட்டுகள்
தொடர்பில் விசாரணைகள்
மேற்கொள்ளப்பட்டாலும் முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு
எவரும் இல்லை
என ரகசியப்
பொலிஸாரின் அறிக்கை மூலம் தெரியவருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
கிண்ணியா
மத்திய மகா
வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தை திறந்து வைக்கும்
வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு
உரையாற்றிய பிரதமர் மேலும் தெரிவிக்கையில்:
இராணுவத்
தளபதிக்கு அமைச்சர்
அழுத்தம் கொடுத்ததாக
கூறப்பட்டிருந்த நிலையில் பின்னர் அமைச்சர் அவ்வாறான
அழுத்தங்களை பிரயோகிக்கவில்லையென இராணுவத்
தளபதி தெரிவித்திருந்தார்.
அமைச்சர்
ரிஷாத் பதியுதீனுக்கு
எதிராகச் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
பின்னர் அவை
நிரூபிக்கப்படவில்லை. அந்த நிலையில்
ரிஷாத் பதியுதீன்
தொடர்பான ரகசியப்
பொலிஸாரின் அறிக்கை சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மேற்படி
விவகாரம் தொடர்பில்
பேராயர் கர்தினால்
மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை
சந்தித்து ரகசியப்
பொலிஸாரும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவும்
தெளிவுபடுத்தவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளன. கத்தோலிக்க மக்களுக்கு கோபம் இருப்பதை
ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான விசாரணைகளுக்கு எவரும்
தடையாக இருக்க
மாட்டார்கள் என்பதையும் அவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
0 comments:
Post a Comment