ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர
9 ஆம் திகதி வரை விளக்கமறியலில்



முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார்.

அன்றைய தினம் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறும் நீதவான், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று கைது செய்தது.

இவர்களை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் லங்கா ஜயரத்ன நேற்று உத்தரவிட்டிருந்தார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top