மருந்து ஏற்றி சென்ற
வாகனம் விபத்து
சாரதி படுகாயம்
யாழ்ப்பாண
வைத்தியசாலைக்கு கொழும்பிலிருந்து மருந்துப்
பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று தடம் புரண்டு
விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்து
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று
(08) காலை 11.00 மணியளவில் முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ்
பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதியின் 233 ஆவது கிலோமீட்டருக்கும்
234 ஆவது கிலோமீட்டருக்கும்
இடைப்பட்ட கிழவன்குளம்
பகுதியில் குறித்த
விபத்துச் சம்பவம்
இடம்பெற்றுள்ளது.
மருந்துப்
பொருட்களை ஏற்றி
சென்ற கூலர் வாகனத்தின்
முன்சக்கரம் காற்று போனதன்
காரணத்தினால் வீதியை விட்டு விலகி தடம்
புரண்டு சுமார்
20 மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு
விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின்
காரணமாக வாகனத்தின்
சாரதி படுகாயமடைந்த
நிலையில் 1990 அவசர நோயாளர் காவு வண்டி
ஊடாக கிளிநொச்சி
வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment