கடன் பிரச்னையால் முன்னாள் கிரிக்கெட் வீரர்
வி.பி.சந்திரசேகர் தற்கொலை
கடன்
பிரச்னையால் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்
வி.பி.சந்திரசேகர் (57) தற்கொலை செய்துகொண்டுள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மயிலாப்பூரில்
உள்ள வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
விபி சந்திரசேகர் தனது மைலாப்பூர் வீட்டில் தற்கொலை செய்துகொண்டதை சென்னை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், அவரது உடல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நேற்று இரவு விபி சந்திரசேகர் தனது அறையில் இருந்து நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை என்றும் இதனால் அவரது குடும்பத்தினர் சந்தேகம் அடைந்து கதவை தட்டியதாகவும், ஆனால் கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது அவர் அங்கு மின்விசிறியில் தூக்கில் தொங்கி பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ந்ததாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக வி.பி.சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்பட்டாலும் இதுகுறித்து பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
மறைந்த வி.பி.சந்திரசேகருக்கு சவுமியா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1988 முதல் 1990 வரை இந்திய அணிக்காக
7 சர்வதேச போட்டிகளில்
வி.பி.
சந்திரசேகர் விளையாடியுள்ளார். கிரிக்கெட்
வர்ணனையாளர், இந்திய அணி தேர்வு குழு
தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

0 comments:
Post a Comment