ஷஹ்ரானின் மனைவி வழங்கிய
இரகசிய சாட்சியம்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பிரதானியான மொஹமட் ஷஹ்ரானின் மனைவி கோட்டை நீதிவான் முன்னிலையில் இரகசிய சாட்சியத்தை வழங்கியுள்ளார்.

ஷஹ்ரான் மற்றும் தற்கொலைதாரியான இல்ஹாம் அஹமட் ஆகியோரின் சாட்சி விசாரணையின்போதே இந்த இரகசிய சாட்சியம் வழங்கப்பட்டது.

இந்த இருவரும் ஷங்ரிலா விருந்தக தாக்குதலின்போது மரணமானார்கள். இதேவேளை ஷஹ்ரானின் 4 வயது மகளும் சாட்சி விசாரணையின்போது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

இதற்கிடையில் தற்கொலைதாரிகளான குறித்த இரண்டு சகோதரர்களின் தந்தையும் நேற்று கோட்டை நீதிவான் முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டனர்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top