சட்ட வைத்திய அதிகாரி ஒருவர்
இராணுவத்தினரால் கைது
பளை
வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ஒருவர்
இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று
இரவு குறித்த
41 வயதுடைய சட்ட வைத்திய அதிகாரி
கைது செய்யப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரி முதலான இரண்டு
இடங்களிலும் முகவரியைக் கொண்டுள்ளவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்
மேலதிக விசாரணைகளுக்காக
யாழ்ப்பாணம் பயங்கரவாத விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாத
செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றசாட்டில் குறித்த சட்ட
வைத்திய அதிகாரி
தேடப்பட்ட ஒருவர்
என பயங்கரவாத
தடுப்பு பிரிவினரால்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம்
தொடர்பான விசாரணைகளை
யாழ்ப்பாணம் பயங்கரவாத விசாரணை பிரிவினர் முன்னெடுத்து
வருகின்றனர்.
0 comments:
Post a Comment