JMI அமைப்பின் மேலும் இருவர்
அம்பாறை பொலிஸாரினால் கைது
சஹ்ரானுடன்
நுவரெலிய மற்றும்
ஹம்பாந்தோட்டை முகாம்களில் ஆயுத பயிற்சி பெற்ற
மேலும் இருவர்
அம்பாறை பொலிஸாரினால்
கைது செய்யப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
முர்த்தஹவல, கெலிஓய எனும் இடத்தைச்சேர்ந்த மூஹம்மத் ஸாஹீர்
முஹம்மத் அஹ்ஸான் என்பவரும் காலியை
வசிப்பிடமாகக் கொண்ட முஹம்மத் அவுதான் அனிஸ் முஹம்மத் என்பவரும் கைது செய்யப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள்
இலங்கையில் தடை செய்யப்பட்ட ஜமாஅதே மில்லது
இப்ராஹிம் (JMI) அமைப்பின் உறுப்பினர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment